சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கான புதிய வகை தோசை! இதனை மட்டும் சேர்த்தால் போதும்..
பொதுவாக வீட்டிலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான காலையுணவுகளில் தோசை முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இந்த தோசையை நெய் தோசை, மசால் தோசை, காய்கறிகள் ஏதாவது சேர்த்து தோசைகள் செய்யப்படும் எனின் அதற்கான பெயரை முன்னாள் தோசை அழைக்கப்படும்.
இந்த வரிசையில் கீரை தோசை அடுத்து வருகிறது. இந்த தோசையை சாப்பிடுவதன் மூலம் காய்கறிகள் சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
அந்தவகையில் கால்சியம் சத்துக்கள் நிறைந்த கீரை தோசை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
- இட்லி மாவு - 200 கிராம்
- பசலைக்கீரை - அரை கட்டு
- பச்சை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 1 தேங்காய்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் தோசைக்கு தேவையான வெங்காயம், ப.மிளகாய், பசலைக்கீரை என்பவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மெதுவாக சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்திருக்கும் கீரைகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
இவ்வாறு வதக்கிய கீரையை மாவையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். அது ஒரு புறம் இருக்கையில், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் என்பவற்றையும் மாவில் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுனுடன் தேவையானளவு உப்பும் சேர்த்து கொள்வது அவசியம்.
தொடர்ந்து தோசைக்கான மாவை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். சுமார் 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடானதும், எண்ணெய் கொஞ்சமாக கல்லில் பூசி, அதில் தோசை மாவை வட்டமாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இரண்டு பக்கமும் தோசையை திருப்பி திருப்பி வேக வைத்த பின்னர்,எடுத்தால் ஆவலுடன் எதிர்பார்த்த கீரை தோசை தயார்!