வேக வைத்த முட்டையை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாமா? வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக முட்டைகளை வேக வைத்து சாப்பிடுவது நல்லது. அதனால் தான் வறுத்த முட்டைகளுக்கு பதிலாக வேக வைத்த முட்டைகளை எடுத்துக் கொள்வகிறோம்.
ஆனால் சில சமயங்களில் நாம் வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பாதுகாப்பது உண்டு.
அப்படி வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எத்தனை நாளைக்கு பாதுகாக்கலாம். எத்தனை நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதை பற்றி தான் நாம் காணப் போகிறோம்.
வேகவைத்த முட்டையை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாமா?
வேக வைத்த முட்டைகளை பாதுகாக்க நினைத்தால் நீங்கள் அவற்றின் ஓட்டை நீக்காமல் இருப்பது நல்லது.
காரணம் மேலே உள்ள ஓடு பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. மேலும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் மற்ற நாற்றங்களை முட்டைகள் உறிஞ்சாமல் இருக்கும்.
வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 7 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.
எனினும் முட்டை புதியதாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே முட்டையை வாங்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து பிறகு அதை வேகவைத்து மீண்டும் 7 நாட்கள் வைத்து சாப்பிட கூடாது. முட்டை ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.
வேக வைத்த முட்டைகள் அறைவெப்பநிலையில் எவ்வளவு நேரம் வைக்கலாம்?
முட்டைகளை வேக வைப்பது எப்படி?
முட்டைகளை வேக வைக்கும் போது நாம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை மஞ்சள் கருவைச் சுற்றி ஆழமான பச்சை நிற வளையம் ஏற்படுகிறது. இது கந்தக சுவையை முட்டைக்கு அளிக்கிறது.
இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட வழி முறைகளை பின்பற்றுங்கள். முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும் குறைந்த பட்சம் முட்டைகள் ஒரு அங்குல தண்ணீரால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்கும் போது முட்டையின் வெள்ளைக் கரு உடைந்து வெளியேறினால் அதில் சிறிதளவு வினிகர் சேர்த்து கொள்ளுங்கள்.
10-12 நிமிடங்கள் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள். இப்பொழுது முட்டைகளை குளிர்ந்த நீரில் போட்டு அதன் ஓடுகளை கவனமாக அகற்ற வேண்டும்.
இப்பொழுது வேக வைத்த முட்டைகளை காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது முட்டையில் இருந்து நாற்றம் வீச வாய்ப்பு இருந்தால் அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.