15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்! சினிமாவிற்குள் நுழைந்தது எப்படி?
மறைந்த நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் 15 வயதில் தந்தையை இழந்தை சினிமாவிற்குள் வந்த பாதையை குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் பிரதாப் போத்தன்
1952 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்... கொளத்திங்கால் போத்தன் மற்றும் பொன்னம்மா போத்தன் ஆகியோருக்கு இளைய மகனாக பிறந்தவர் தான் பிரதாப்.
இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர். வசதியான குடும்பத்தில் பிறந்த பிரதாப் தன்னுடைய 5 வயதில் ஊட்டியில் உள்ள லாரன்ஸ் ஸ்கூல் என்ற பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கினார்.
தற்போது திரைத்துறையில், இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றிவாகை சூட்டியுள்ள பிரதாப் போத்தன், பள்ளி பருவத்தில் ஓவியம் வரைவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

15 வயதில் இறந்த தந்தை
நடிகர் பிரதாப் போத்தனுக்கு 15 வயது இருக்கும் போது தந்தை உயிரிழந்த நிலையில், அவரது மூத்த சகோதரரான ஹரி போத்தன் குடும்பத்தை கவனித்து கொண்டதுடன், அவரது சகோதரர் சில திரைப்படங்களையும்தயாரித்துள்ளார்.
பள்ளி படிப்பை முடித்த பின்னர் சென்னை வந்த பிரதாப், தன்னுடைய கல்லூரி நண்பர்களின் உதவியோடு நாடகங்களில் நடிக்க துவங்கினார். படிப்படியாக ஓவியம் வரைவதைவிட நடிப்பில் இவரது முழு ஆர்வமும் சென்றது.
பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரதாப், மும்பை விளம்பர நிறுவனத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார், மேலும் சிஸ்டாஸ் ஆட் ஏஜென்சி மற்றும் ஹிந்துஸ்தான் தாம்சன் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

சகோதரரால் கிடைத்த வாய்ப்பு
இவரது சகோதரர் சில படங்களை தயாரித்துள்ளதால், இவருக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது. 'அரவம்' என்கிற படத்தில் அறிமுகமான பிரதாப், தன்னுடைய இரண்டாவது படத்தை தமிழ் மாற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்தார்.
அதாவது அழியாத கோலங்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அடுத்தடுத்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
சிறந்த நடிகராக மட்டும் இன்றி, திரையுலகில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
குறிப்பாக பிரதாப் இயக்கத்தில் வெளியான, ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, மை டியர் மாத்தாண்டன் போன்ற படங்கள் தற்போது வரை, ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த படங்களாக உள்ளது.

தூக்கத்தில் பிரிந்த உயிர்
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவியை பிரிந்து கடைசியில் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார்.
மேலும் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலை 8 மணிக்கு உயிர் இழந்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
