நடிகர் பிரதாப் போத்தன் இப்படி தான் இறந்தாரா? ரசிகர்களை கண்கலங்க வைத்த தகவல்!
பிரபல நடிகரான பிரதாப் போத்தன் காலமான தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் - பொன்னம்மா போத்தன் தம்பதிக்குப் பிறந்தவர் பிரதாப் போத்தன்.
இவர், 1978 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் மம்மூட்டியின் சிபிஐ 5 படத்திலும் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தனிமையில் மரணம்
1985 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்த பிரதாப் போத்தன், 1986 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு அமலா சத்யநாத் என்பவரை 1990-ம் ஆண்டு மணந்தார். ஆனால் 2012ல் இவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், பிரதாப் போத்தான் எப்படி இறந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் பிரதாப் போத்தன்.
சமீப காலமாக சென்னையில் தனிமையில் வாழ்ந்து வந்த அவர், தனிமையில் காலை 8 மணியளவில் இறந்துகிடந்துள்ளார்.
பின் காலை வெகு நேரமாகியும் இவர் எழ தாமதமானதால் இவருடைய சமையல்காரர் காபி போட்டு இவரது அறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படித்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மாரடைப்பால் இறந்திருக்கலாம்
தட்டி எழுப்பியும், முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் எழாததால், உடனடியாக இது குறித்து பிரதாப் போத்தனின்கார் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, பிரதாப் போத்தனை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் இவரை சோதனை செய்து விட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், பிரதாப் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது உடல் அஞ்சலிக்காக இன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் வேலங்காடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.