உடல் எடையைக் குறைக்க உருளைக்கிழங்கு போதும்... எப்படித் தெரியுமா?
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும். அப்படி உருளைக்கிழங்கில் அதிக மாவு சத்து நிறைந்துள்ளதால் உடல் எடைக்குறைக்க நினைப்பவர்கள் உணவில் உருளைக்கிழங்கை சேர்ப்பதை தவிர்த்த விடுவார்கள்.
ஆனால் இந்த உருளைக்கிழங்கு உடல் எடையைக் குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடையைக் குறைக்கும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு உண்மையில் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இது ஒரு சிறந்த எடை இழப்பு உணவாக அமைகிறது.
உருளைக்கிழங்கில் அதிக நார்ச்சத்து மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உள்ளது, உருளைக்கிழங்கு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது .
உருளைக்கிழங்கில் புரோட்டீஸ் இன்ஹிபிட்டர்கள்-2 நிறைந்துள்ளது.
உருளைக்கிழங்கிலும் பாலிபினால்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சர்க்கரைகளை அதிக விகிதத்தில் உடைப்பதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கில் உள்ள அதிக பொட்டாசியம் நீர் தேக்கத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உருளைக்கிழங்கு உங்கள் கொழுப்பு செல்கள் சுருங்குவதற்கு கூட வழிவகுக்கும்.
உருளைக்கிழங்கில் 77 கலோரிகள், 2 கிராம் புரதம் மற்றும் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது அதனால் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
உருளைக்கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து இயற்கையாக பசியை அடக்கி, உணவுக்குப் பிறகு முழுமை மற்றும் திருப்தி உணர்வைத் தூண்டுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |