உடல் எடையை குறைக்க வனிதா என்ன செய்தார்?
சமீபகாலமாகவே ஹாட் டாபிக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார், விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தொடர்ந்து ஒரு சில படங்களே நடித்திருந்தாலும், இளவயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
அந்த வாழ்க்கை கருத்து வேறுபாடால் காணாமல் போக, மூத்த மகளுடன் வசிக்கத் தொடங்கினார், மகன் தந்தையுடன் வசித்தார்.
தொடர்ந்து இரண்டாவது திருமணமும் சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது, இப்படி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியிருந்தாலும் பிக்பாஸ் 3க்கு பின்னர் படங்களில் நடிக்க கமிட்டாகிவருகிறார் வனிதா விஜயகுமார்.
எதையும் அசால்டாக கடந்து போக கூடியவர் வனிதா அக்கா என்றெல்லாம் ரசிகர்கள் ஆதரவு மழையை பொழிந்து வருகின்றனர்.
இந்த பதிவில் உடல் எடை அதிகம் இருந்த வனிதா, 20 வயது அழகி போல மாறியது எப்படி என தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைத்தது எப்படி?
எடை குறைப்பு என்பதை முடிவு செய்தவுடன் வனிதா முதலில் செய்தது வெள்ளை உணவுகளை தவிர்த்துவிட்டாராம், வெள்ளை அரிசி, சர்க்கரை, பால் மற்றும் தயிர் உணவுகளை முழுமையாக தவிர்த்து விட்டார்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜுஸ் அருந்தி வந்துள்ளார், இதுமட்டுமல்லாது அம்மா கொடுத்த டிப்ஸ்-ம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.
அதாவது வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவாராம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதில் சிறந்தது இந்த பானம்.
இரவு நேர உணவாக பிரவுன் ரைஸ், கம்பு, குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளையும் உண்டு வந்துள்ளார்.
மிக முக்கியமாக மூன்று வேளை சாப்பிடக்கூடிய உணவை பிரித்து ஆறு வேளையாகவும் சாப்பிட்டு வந்துள்ளார்!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |