உடல் எடையைக் குறைக்க நட்ஸ் சாப்பிடலாம்: எப்போது தெரியுமா?
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும்.
உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும். இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும்.
இப்படி உடல் எடை அதிகரித்து இருப்பவர்கள் நட்ஸ்களை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால் சாப்பிடமாட்டார்கள் ஆனால் நட்ஸ்களை சாப்பிட்டும் உடல் எடையைக் குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைக்கும் நட்ஸ்
- பாதாமில் அதிகமான புரதமும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. பாதாம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு இருப்பதால் அடிக்கடி சாப்பிட தோணாது இதனால் இலகுவில் உடல் எடைக்குறையும்.
- வால்நட்டில் இருக்கும் சத்துக்கள் கொழுப்பை எரிக்கும் சக்தியைக் கொடுக்கிறது. அதனால் பசியைக்கட்டுப்படுத்தி உணவு சாப்பிடுவதை தடுக்கிறது.
- பிஸ்தாவில் கலோரிகள் குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருப்பதால் இது உடல் எடை குறைவதற்கு சிறந்ததாக இருக்கும். ஆனால் இதனை அதிகமாக சாப்பிடக்கூடாது.
- முந்திரி முந்திரியில் மெக்னீசிய சத்தும், புரத சத்தும் அதிகம் இருப்பதால் அது பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
- பிரேசில் நட்ஸில் புரதச் சத்தும், நார்சத்தும் இருப்பதால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |