உடல் எடையை குறைக்க முடிவெடுத்துள்ளீர்களா? இன்றிலிருந்து குடிக்கலாம் டீ!
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.
விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும்.
உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும். எவ்வாறு உங்கள் உடல் எடையைக் குறைக்க எவ்வித உடற்பயிற்சியும் இன்றி தினமும் வெந்தய டீயை குடிக்கலாம்.
வெந்தய டீ தயாரிக்கும் முறை
ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்து வருகின்ற போது அதில் ஒரு கரண்டி வெந்தயத்தை சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்து பாதியாகும் வரைக்கும் கொதிக்க விட்டு பிறகு அந்த தண்ணீர் ஆறியது வடிகட்டி குடிக்க வேண்டும்.
இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |