பொன்னியின் செல்வன் பூங்குழலியின் அழகு ரகசியம் என்ன தெரியுமா?
வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபல்யமானவர் தான் ஐஸ்வர்யா லக்சுமி.
இவர் தமிழில் கட்டகுஸ்தி திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு அழகே இவரின் பிரகாசமான முக அழகுதான். இவரின் அழகு ரகசியத்தை தெரிந்துக் கொண்டால் நீங்களும் ட்ரைப் பண்ணி பார்க்கலாம்.
ஐஸ்வர்யாவின் அழகு ரகசியம்
தனது தோல் அழகை பாதுகாப்பதற்காக மல்டி விட்டமின்களை எடுத்துக் கொள்வாராம்.
ஒவ்வொரு வாரமும் சூடான எண்ணெய்யில் மசாஜ் செய்வாராம். இரவு படுக்கைக்கு செல்லும் போது முகத்தை நன்றாக கழுவி நைட் க்றீம் போடுவாராம்.
காலையில் வழமையாக முகக்தை கழுவ பேஸ்வோஷ் மற்றும் சன்ஸ்க்றீம் கொண்டு தான் நாளை ஆரம்பிப்பாராம்.
உடலுக்கும் தலைமுடிக்கும் சூடான எண்ணெய் மசாஜ் செய்வது பல அதிசய நன்மைகளை கொடுக்கும்.
சேதமடைந்த கூந்தலுக்கு சூடான எண்ணெய் தான் சிறந்தது. இது நமது தலைமுடியை ஆரோக்கியமாக பாதுகாக்கும்.
மேலும், முடியை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கும். உடலுக்கு வெதுவெதுப்பான எண்ணெய்யில் மசாஜ் செய்தால் உடலுக்கு தளர்வையும் இரத்த ஓட்டத்தையும் கொடுக்கும்.
முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு நாம் உணவு உணவைக் கட்டுப்படுத்தினால் முகப் பருக்கள் குறையும்