இனி ஸ்பா செல்ல வேண்டியதில்லை வீட்டிலேயே ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்யலாம்!
பொதுவாகவே சிலர் வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறையாவதே தங்கள் உடலுக்கு மசாஜ் செய்துக்கொள்வது வழக்கம்.
மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடல் மற்றும் தசைகளில் ஏற்படும் வலி குறைகிறது. எண்ணெய் மசாஜ் செய்வதால் ஸ்டெரஸ் இல்லாமல் போவதுடன் மனநலம் நன்றாக இருக்கும்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மசாஜ்களை நாங்கள் நிறைய பணம் கொடுத்து வெளியில் செய்வதை விட உங்கள் கைகளிலேயே வீட்டிலே செய்யலாம்.
அந்தவகையில் வீட்டிலேயே மசாஜ் எண்ணெய் எவ்வாறு செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்
இனிப்பு பாதாம் எண்ணெய்
ஜொஜோபா எண்ணெய்
எசன்ஸ் எண்ணெய் (லாவெண்டர்,பெப்பர்மெண்ட்,வெண்ணிலா)
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெய்யை ஒரு கப் மற்றும் ஸ்வீட் பாதாம் எண்ணெய் அரை கப் என இரண்டையும் நன்றாக கலந்துக் கொள்ளவேண்டும்.
அதில் ஜொஜோபா எண்ணெய் கால் கப் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு எசன்ஸ் எண்ணெய்களான (லாவெண்டர்,பெப்பர்மெண்ட்,வெண்ணிலா) எண்ணெய்களில் 6-7 துளிகளை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலந்துக்கொண்ட பிறகு சிறிய சுத்தமான போத்தலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாவனை முறை
இவ்வாறு நீங்கள் தயாரித்துக்கொண்ட எண்ணெய்யை நீங்கள் குளித்து முடித்து விட்டு வந்த பிறகு உங்கள் உடலில் நன்கு போட்டு மசாஜ் செய்துக்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த எண்ணெய்யில் சேர்த்துக் கொண்ட எசன்சியல் எண்ணெய்களின் வாசனை உங்கள் மூளைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.