இந்த டீயில் உங்க தலைமுடியை கழுவுங்க...உங்க முடி கருகருன்னு நீளமா வளரும்!
பச்சை மற்றும் கருப்பு தேநீரில் இயற்கையாகவே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளது.
அதிக காஃபின் உள்ளடக்கம் இருப்பதால், பிளாக் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்... இந்த பழங்களை சேர்த்து சாப்பிடாதீர்கள்
ஏனெனில் அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உதிர்வதைத் தடுக்கும்.
உங்கள் தலைமுடிக்கு தேநீரை பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முடிக்கு தேநீர் தடவுவதன் நன்மைகள்
- பிளாக் டீயை தலையில் தடவுவது வெள்ளையான முடியை கருப்பாக மாற்ற உதவுகிறது.
- கிரீன் டீயில் உள்ள பி வைட்டமின் முடியை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
- கிரீன் டீயின் காஃபின் மற்றும் பாலிபினால்கள் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
- கருப்பு மற்றும் பச்சை தேயிலை மந்தமான முடிக்கு பொலிவை சேர்க்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- உங்கள் முடியை கருகருவென மாற்றவும் இது உதவுகிறது.
- ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு கூடுதலாக, கருப்பு மற்றும் பச்சை தேயிலை எரிச்சலூட்டும் உச்சந்தலையை ஆற்றுவதற்கு சிறந்தது.
டம்ளர் நீரில் சிறிது உப்பு: கஷ்டம் நீங்கி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கொட்டும்
முடிக்கு தேநீரை பயன்படுத்துவது எப்படி?
தேவையான பொருட்கள்
- தண்ணீர்
- ஒரு ஸ்ப்ரே பாட்டில்
- கருப்பு அல்லது பச்சை தேயிலை பை
செய்முறை
2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
குறைந்தது 1 மணிநேரத்திற்கு 4 கருப்பு அல்லது பச்சை தேயிலை பைகளை தண்ணீரில் வைக்கவும்.
தேநீர் குளிர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். தேநீரை சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.
பின்னர், தலைமுடியை உலர வைக்கவும். உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு குறைந்தளவு தேநீர் தடவவும், பின்னர் மசாஜ் செய்யவும்.
ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பையில் அணிந்து 60 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின்னர் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஈரப்பதத்தை தக்கவைக்க ஆழமான கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.
குண்டை தான் வாங்கி ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போன்... முதல் முறை பதிவான அரிய சம்பவம்!
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
வாரத்திற்கு ஒரு முறை கருப்பு தேநீர் கொண்டு முடியை அலச பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் நீங்கள் எந்த வகையான கருப்பு தேநீரையும் பயன்படுத்தலாம்.
அதற்கு பின்னர் உங்கள் முடியை உலர வைக்க வேண்டும்.