குப்பையில் தூக்கியெறியும் ஆரஞ்சு பழ தோல்! உங்களை அழகில் ஜொலிக்க வைக்குமாம்
ஆரஞ்சு பழம் வைட்டமின் சி நிறைந்தது. உடலுக்கு நன்மை சேர்க்கும் பழம், இதன் தோல், சரும அழகை பராமரிக்க உதவுகிறது.
அதன் தோலில் கெட்ட கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. முகத்திற்கு ப்ளீச்சிங் போன்று செயல்பட்டு முகக் கருமையையும் நீக்க உதவும்.
ஆரஞ்சு பீல் பவுடன் தயாரிக்கும் முறை:
ஆரஞ்சு பழம் வாங்கினால் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை அடுத்த முறை தூக்கி வீசாமல் சூரிய ஒளியில் நன்றாக காயவைத்து, அதை மிக்ஸியில் மைய அரைத்து பவுடர் போல் டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை ஃபேஸ்பேக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். எவ்வாறு என்பதைக் கீழேக் காணலாம்.
ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர்:
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பீல் பவுடர் - 1 Tsp
தயிர் - 2 Tsp
செய்முறை : இரண்டையும் நன்கு பேஸ்ட் போல், முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். முகக் கருமை நீங்கி, முகம் பொலிவு பெறும்.
ஆரஞ்சுத் தோல், மஞ்சள் மற்றும் பாதாம் எண்ணெய்:
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சுப் பீல் பவுடர் - 1 Tsp
மஞ்சள் பொடி - 1 Tsp
பாதாம் எண்ணெய் - 1 Tsp
ரோஸ் வாட்டர் - 2 - 3 சொட்டுகள்
செய்முறை : குறிப்பிட மூலப்பொருட்களைப் பக்குவமாக பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடுங்கள். முகம் பளபளப்பாகும்.