பத்ம பூஷண் விருதுக்காக காத்திருந்த பின்னணி பாடகி உயிரிழப்பு! கண்ணீரில் திரையுலகம்..
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமாகிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னணி பாடகியின் வாழ்க்கை பயணம்
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் சாதனை படைத்த இவர் சுமார் 19 மொழிகளில் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் கடந்த 1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’என்கிற பெயரில் பிறந்துள்ளார்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே சினிமாக்களில் பாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கு பின்னர் தான் கல்லுாரி படிப்பை முடித்து விட்டு உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக “ஹிந்துஸ்தானி இசை” கற்றுக்கொண்டுள்ளார்.
இவர் முதல் முதலில் ‘மியான் மல்ஹார்’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பணியாற்றினார். இவரின் முதல் படத்திலே ரசிகர்களை தன்வசப்படுத்தி விட்டார் என்றே கூற வேண்டும்.
இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் இவர் திரையிசைப் பயணத்தை வெறும் வார்ததையால் கூற முடியாது அவ்வளவு புகழ்ச்சிகள், சாதணைகள் உள்ளடக்கி வைத்துள்ளார்.
இன்று காலமானார்
இந்த நிலையில் சமிபத்தினங்களுக்கு முன்னர் இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
மாறாக இவர் அவரது சென்னையிலுள்ள வீட்டில் இன்று காலமாகிள்ளார். ஆனால் இவர்கள் தங்களுக்காக அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை வாங்காமலேயே இறந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.