உடல் வெப்பத்தைக் குறைக்கும் பெருஞ்சீரகம்
தற்போதைய கோடைக் காலத்தில் உடலில் இருக்கும் வெப்பம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும் இதனை சமாளிக்க பெருஞ்சீரகம் பெரிதும் இருக்கும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்களில் பெருஞ்சீரகத்துக்கு முக்கிய பங்குண்டு, இந்தப் பெருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
பெருஞ்சீரகத்தின் நன்மைகள்
இந்தப் பெருஞ்சீரகம் வாயுத்தொல்லைகளில் இருந்தும் வயிறு பிரச்சினைகளுக்கும் அருமருந்தாகிறது. உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பெருஞ்சீரகம் உதவும்.
பெருஞ்சீரகத்தில் செலினியடம், துத்தநாகம், போன்ற கனிமங்கள் அதிகம் இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்கும்.
தினமும் காலையில் டீ, காப்பிக்கு பதிலாக பெருஞ்சீர டீ குடித்தால் இந்த கோடைக்காலத்தை செரிமான கோளாறு, வயிறு உபாதைகளில் இருந்து பாதுகாக்கலாம்.
சாப்பிட்ட பிறகும் கொஞ்சமாக பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிட்டால் வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
மேலும், பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடியாக்கி கலந்து குடித்தால் பல உடல் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம்.
தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வந்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.