சிறுவர்களை குறி வைக்கும் தைராய்டு நோய்! இதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை அதிகம் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைகளால் அதிக உடல் எடை குறைவு, சோம்பல், வளர்ச்சி தட்டுபாடு, மாதவிடாய் கோளாறு என பல பிரச்சினைகளில் பாதிக்கபடுகிறார்கள்.
தைராய்டு என்பது பொதுவாக மனிதர்களின் கழுத்துப்பகுதியில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு சுரப்பியாகும் இந்த சுரப்பி தான், மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாகச் செயற்படுவதற்கான ஹார்மோன்களை வழங்குகிறது. மேலும் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி என்று கூட கூறலாம்.
இந்த ஹார்மோன் சுரப்பியில் ஏற்றத்தாழ்வை ஏற்படும் போது தைராய்டு நோய்க்கான பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் தைராய்டு பிரச்சினை பொதுவாக ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அந்தவகையில் தைராய்டு பிரச்சினை நமக்கும் இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் வைத்து நாம் தெரிந்துக் கொள்ள முடியும்.
அறிகுறிகள்
தைராய்டு இருந்தால் நமது கழுத்து பகுதியில் ஒரு மெல்லிய வலியும் வீக்கமும் இருக்கும்.
உடல் எடையில் காலப்போக்கில் திடிரென குறையும் அல்லது அதிகரிக்கும்.
மூச்சு விடுவதில் அடிக்கடி சிரமம் ஏற்படும்.
பெண்களின் குரல்கள் காலப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
சிலருக்கு திடீரென கை கால்களில் நரம்புத்தளர்ச்சி ஏற்படும்.
இதய துடிப்பு அதிகரிக்கும்.
மாதவிடாய் பிரச்சினை சீராக இருக்காது, இது கர்ப்பம் தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு ஆபத்தாகவும் போய் முடியும்.
தைராய்டு பிரச்சினை வர என்ன காரணம் தெரியுமா?
நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அயடின் குறைவாக இருந்தாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படும்.
நமது பெற்றோர்களில் இருவரில் ஒருவருக்கு இந்த பிரச்சினை இருந்தாலும் காலப்போக்கில் தைராய்டு குழந்தைகளுக்கும் இருக்கும்.
தைராய்டு நோய் ஒரு தொற்று நோய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் இது கணவன் - மனைவி மற்றும் தாய் - குழந்தைகள் என கடத்தப்படுகிறது.
அடிக்கடி மன உளைச்சல், மன நிலை சரியில்லாமல் அடிக்கடி கவலைப்படுவர்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கும்.
தைராய்டு பிரச்சினைக்கான மருந்துவம் என்ன தெரியுமா?
1. தினமும் தைராய்டு பிரச்சினை உள்ள வீதத்தினை பொருத்து மருந்துவில்லைகள் எடுத்துக் கொள்ளல்.
2. அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளல்.
3. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து.
முக்கிய குறிப்பு
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ இருந்தால் முறையான மருத்துவரை நாடி சிகிச்சைப் பெறுவது நன்று.