பாஸ்தாவில் பாயாசம் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
வழமையாக பாஸ்தாவை காய்கறிகளை சேர்த்து உண்ணுவோம். இல்லையெனில்,வெறுமனே பாஸ்தாவை மட்டும் உண்ணுவோம். இனி சற்று வித்தியாசமாக பாஸ்தாவில் பாயாசம் செய்து உண்போமே...
தேவையான பொருட்கள்
பால் - 2 1/2 கப்
மக்ரோனி - 1 கப்
கன்டென்ஸ்ட் மில்க் - 1 மேசைக்கரண்டி
சீனி - 5 மேசைக்கரண்டி
முந்திரி - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, மக்ரோனியை பாதியாக வேக விடவேண்டும்.
வெந்தவுடன் நீரை வடித்து குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ளவும்.
அதன்பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அதே பாத்திரத்தில் சீனி மற்றும் பால் சேர்த்து சீனி நன்றாகக் கரையும்வரை கொதிக்க விடவேண்டும்.
அதன்பின்பு பாலில் மக்ரோனியைச் சேர்த்து வேகவைத்து கன்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
பால் நன்றாக கெட்டியானதும் அதில் முந்திரியை சேர்த்து இறக்கவும். பாஸ்தா பாயாசம் ரெடி.