பாஸ்தா செய்த தண்ணீரை வீணாக கீழே ஊற்றுகிறீர்களா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்குதாம்
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்த பாஸ்தா இத்தாலிய உணவு வகையை சேர்ந்தது. பெரும்பாலானோருக்கு பாஸ்தா என்றால் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான பாஸ்தா 10 நிமிடத்தில் எளிதாக செய்யக்கூடியது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்த பாஸ்தா இத்தாலிய உணவு வகையை சேர்ந்தது.
பாஸ்தா வழக்கமாக கொதிக்க வைத்து செய்யப்படுகிறது. பாஸ்தாவை தண்ணீர் ஊற்றி கொதிக்க வடிகட்டி அதனை தனியாக எடுத்து சமைப்பர். பிறகு எஞ்சியிருக்கும் தண்ணீரை மிகவும் பொதுவாக கீழே ஊற்றிவிடுவது ஒரு பொதுவான விஷயம். இருப்பினும், இந்த நீரை நமது அன்றாட பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம். பாஸ்தா நீரை நீங்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்தக்கூடிய 5 முறைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
செடிகள் வளர பாஸ்தாவை சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இது பெரும்பாலும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாக இருக்கிறது, இது தாவரங்கள் மற்றும் பூக்களை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். பாஸ்தா நன்கு தண்ணீரில் கொதித்தால் அதில் இருக்கும் சத்துக்கள் அந்த நீரில் கலந்திருக்கும் என்பதால் அடுத்த முறை உங்கள் பாஸ்தாவை வேகவைக்கும்போது, அந்த தண்ணீரை வடிகட்டி உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தவும். ரொட்டி தயாரிக்க பாஸ்தா நீர் சில சுவைகளைத் தக்க வைத்து கொண்டிருப்பது மட்டுமின்றி, பாஸ்தாவிலிருந்து ஸ்டார்ச் சத்துக்கள் முழுவதும் அதனை வேக வைத்த தண்ணீரில் நிறைந்திருக்கும்.
இது உங்கள் வீட்டில் தயாரிக்கும் பீஸ்ஸா மாவு அல்லது சப்பாத்தி/பூரிக்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கும். பாஸ்தா தண்ணீரை குளிர்சாதன பெட்டியில் வைத்து, உங்கள் சப்பாத்தி மாவை பிசைய தண்ணீர் தேவைப்பட்டால், அதனை எடுத்து சேர்த்து கொள்ளலாம். இது உங்கள் சப்பாத்தியை மேலும் ரிசியாக்கும்.
சாதம் செய்ய பாஸ்தா நீர் சாதத்திற்கு சுவையை தருகிறது. குழாய் நீரில் அரிசியை கொதிக்க வைப்பதற்கு பதிலாக, நீங்கள் செய்த பாஸ்தா தண்ணீரை அரிசி வேக வைக்க பயன்படுத்தவும். நீங்கள் அதிகமான அளவு உணவை தயாரிக்கும் போது இந்த தண்ணீரை வேறொரு பானைக்கு மாற்றுவது எளிது. நீங்கள் அந்த தண்ணீர் கொதி நிலைக்கு வந்த பின்னர் அரிசியை சமைக்க பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சாதம் ருசியாகவும், உதிரிஉதிரியாக ஒட்டாமலும் இருக்கும்.
சாஸ் தயாரிக்க நீங்கள் வீட்டிலேயே சாஸ் தயாரிக்க எண்ணினால் சாதாரண தண்ணீர் சேர்த்து செய்யும் போது மிகவும் கெட்டியாவிடும். ஆனால் பாஸ்தா தண்ணீரை சேர்த்தால், இது உங்கள் சாஸை சரியான பதத்தில் கொண்டு வரும். மேலும் கூடுதல் சுவையையும் சேர்க்கும். பாதங்களை மென்மையாக மாற்ற உங்கள் பாதங்களை மிருதுவாகவும், புண் இருந்தால் பாஸ்தா தண்ணீர் இந்த சிகிச்சை உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பாஸ்தா நீரை சூடேற்றி, அதில் உங்கள் கால்களை நனைக்க வேண்டும். தாதுக்கள் நிறைந்த இந்த தண்ணீரில் மிதமான வெப்ப நிலையில் இருக்கும் போது உங்கள் வலிகள் மற்றும் காயங்களை ஆற்றும்.