பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மற்றுமொரு சந்தோசம்! அவரே வெளியிட்ட புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அவருடைய புதிய காரின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பாத்தார் என நான்கு சகோதரர்களும் அவர்களின் வாழ்க்கை எப்படி செய்கின்றது என்பதனையும் இந்த சீரியல் எடுத்து கூறுகின்றது. தற்போது சகோதரர்கள் நான்கு பேரும் நான்கு திசையில் இருக்கிறார்கள்.
மேலும் கண்ணன் ஆடம்பரமாக பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டு தற்போது மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் இருக்கிறார்.
இதே சமயம் ஜீவா மாமனாரிடம் அடிக்கடி அசிங்கப்பட்டு கொண்டு மீனாவின் வீட்டில் இருந்து வருகிறார்.
புதிய கார் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சரவண விக்ரம் நடித்து வருகிறார்.
இவருக்கு “விஜய் டெலிவிஷன்” விருதில் சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக விருதும் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் அழகிய காரொன்றை வாங்கியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது பல இலட்சம் பெறுமதி இருக்கும் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.