எனக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்க வேணாம்! ஜீவாவிடம் கொந்தளிக்கும் மாமனார் - ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து ஜீவாவை பிரித்து தன்வசப்படுத்தி மீனாவின் அப்பா தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்து கூட்டு குடும்பத்தில் நடக்கும் உண்மை விடயங்களை சமூகத்திற்கு எடுத்து கூறி வருகிறது.
மேலும், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸிலுள்ள அண்ணன், தம்பிகள் அனைவரும் பிரிந்து தங்களின் வாழ்க்கை நடாத்தி வருகிறார்கள்.
ஜீவா அவருடைய மாமனார் வீட்டிலும்,கண்ணன் மனைவி வீட்டிலும் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியாக இருந்தும் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கவில்லை என மிகுந்த வேதனையாக இருந்து வருகிறார்கள்.
அவமானத்தில் கூனி குறுகிய ஜீவா
இந்த நிலையில் கண்ணனின் மனைவி ரீல்ஸ் செய்து வெளியிடுவதாக கூறி கீழே விழுந்து மருத்துவமனை செலவுக்கு கூட பணமில்லாமல் இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ஜீவாவும் மீனாவின் அப்பாவிற்கு தெரியாமல் சில முடிவுகளை எடுத்து அவமானப்பட்டு கொண்டிருக்கிறார்.
இந்த அவமானத்திற்கு பின்னர் ஜீவாவும் கண்ணனும் மூர்த்தியின் ஆதரவை நாடுவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்போது இந்த குடும்பம் ஒன்று சேரும் என எதிர்பார்த்து நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.