ரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கிய சீரியல்: காதலை உறுதி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த ரீல் ஜோடிகள் தற்போது ரியல் ஜோடிகளாக மாறியிருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்தப் பாசக்கதையை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள்.
எல்லோரும் ஒன்றாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த குடும்பம் தனித்தனியாக பிரிந்து விட்டார்கள். தற்போது இவர்கள் அனைவரும் கொஞ்சம் ஒன்று சேர்வது போலவும் காட்டப்பட்டு வருகிறது.
காதலை உறுதிப்படுத்திய ஜோடி
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டியான கண்ணனும் அவருக்கு மனைவியாக நடித்து ஐஸ்வர்யாவும் காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இலிருந்து நண்பர்களாக பழகி வந்த இவர்கள் அவ்வப்போது இணைந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செய்து வெளியிடுவார்கள் இதனால் பலரும் இவர்கள் காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா இப்போது மட்டுமல்லா இனி வரும் வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்தே இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று பதிவிட்டிருக்கிறார்கள்.
இதற்கு விஜய் ரிவி புதிய ஜோடியை உருவாக்கியுள்ளது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |