மனைவியை ஈட்டியால் குத்திய கணவர்: விஷம் அருந்தியும் உயிர் போகாமல் தவிப்பு! பின்பு எடுத்த முடிவு
ஜெயங்கொண்டம் அருகே குடும்ப தகராறில் மனைவியை ஈட்டியால் குத்திவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (45). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர்.
இவரது மனைவி ஷெல்பா (37). இவர்களுக்கு பரத்(17), பிரியா (15) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கண்ணன், வீட்டில் இருந்த ஈட்டியால் ஷெல்பாவை கழுத்து மற்றும் கால் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.
இதில், பலத்த காயமடைந்த ஷெல்பாவை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே, ஷெல்பாவின் உறவினர்களுக்கு பயந்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற கண்ணன், உயிர் போகாததால் அருல் உள்ள முந்திரி தோட்டத்தற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி, பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.