கதிர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கதிகலங்கி போன தனம்! சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்
கயல் பாப்பாவை பார்த்து கண்கலங்கிய ஏங்கிய நிற்கும் தனத்தின் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய திருப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் மூர்த்தி, கதிர்,ஜீவா, கண்ணன் என நான்கு கதாநாயகர்களும், தனம்,முல்லை, மீனா, ஐஸ்வர்யா என நான்கு கதாநாயகிகளையும் கொண்டு நகர்த்தப்படுகிறது.
இதனை இந்த சீரியலில் கொஞ்சம் நாளாக பெறும் சண்டையாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்த நிலையிலும் காணப்படுகிறது.
இதனால் தனத்தால் கயல் பாப்பாவை பார்க்க முடியாமல் மிகுந்த ஏக்கத்துடன் இருந்து வந்தார்.
தனத்திற்கு கொடுத்த சர்ப்ரைஸ்
இதனை தெரிந்து கொண்ட கதிரும் முல்லையும் ஆரம்ப பள்ளியிலிருந்து கயல் பாப்பாவை அழைத்து வந்து தனத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் கயலை பார்த்த தனம் கட்டி பிடித்து கதறி அழுப்படி ஜீவாவையும் மீனாவையும் தேடியுள்ளார்.
இதனை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்த முல்லையும் கதிரும் தனத்தை ஏமாற்றி விட்டோமா? என மனம் வருத்தப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது வெளியான எபிசோட்டில், இந்த குடும்பத்தில் கயல் பாப்பாவால் இன்னொரு சண்டையை கிளப்புவது போன்று இயக்குநர் காட்டியிருப்பார்.