கடைசி எபிசோட்டை நோக்கி பயணிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இறுதியில் மீனா அப்பா வைத்த டுவிஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் நிறைவிற்கு வருவதால் ஜீவா மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மீண்டும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
பல திருப்பங்களுடனும், சுவாரசியத்துடனும் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது புதுமனை புகுவிழா கொண்டாட்டம் நடைபெறுகின்றது.
ஜீவா கொடுத்த பதிலடி
இந்த நிலையில், ஜீவா அவருடைய மாமனார் அவருடைய வீட்டிற்கு வருமாறு மீண்டும் அழைக்கிறார். இடையில், மூர்த்தி வந்து “ என்னுடைய தம்பி எங்காயும் வர மாட்டான்.
அவன் என்னுடைய வீட்டில் தான் இருப்பான்..” என கூறியுள்ளார். ஜீவாவும் அண்ணன் எப்போது என்னை வீட்டிற்கு கூப்பிடுவார் என காத்திருந்தேன்.
அவரே கூப்பிட்டு விட்டார். ஆகையால் நான் எங்கும் வரமாட்டேன்..” என மகிழ்ச்சியாக மீனாவின் அப்பாவிற்கு கூறியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், சீரியரல்களில் இந்த சீரியலின் முடிவு சற்று வித்தியாசமாகவுள்ளது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |