இலங்கை பெண் லொஸ்லியாவா இது? 3 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாங்கனு பாருங்க
நடிகை லொஸ்லியா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் பயங்கர பிஸியாகியுள்ளார்.
பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு லொஸ்லியா
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லொஸ்லியா முதன்முறையாக ஜிம்மிற்கு சென்ற அனுபவத்தினையும், அத்தருணத்தில் எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டு நெகிழ வைத்துள்ளார்.
பாராட்டு பதிவு என்று ஆரம்பித்த லொஸ்லியா, நான் 2021ல் எனது வொர்க் அவுட் தொடங்கியபோது என்றும் இந்த நீண்ட பயணத்தில் பல தடைகளையும், வலிகளையும் சந்தித்துள்ளேன்.
இவை எளிதான வேலை கிடையாது.... சில நேரங்களில் நான் எழுந்திருக்க விரும்பவில்லை, நான் தூங்க விரும்புகிறேன், சில நேரங்களில் என் உடல் என்னுடன் ஒத்துழைக்காது. சில சமயங்களில் என் மனம் சொல்கிறது, உட்கார்ந்து உங்கள் மன ஆரோக்கியத்தை அமைதிப்படுத்துங்கள் என்று... ஆனால் நான் ஒரு விடயத்தை மட்டும் உணர்ந்தேன் சீக்கிரம் எழுந்து எனது வேலையை செய்வது, என்னுடைய ஒழுக்கத்தையே எனக்கே காண்பித்ததது.
கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகியும், எப்போதும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன் என்றும் கடந்த 2021ம் ஆண்டில் எடுக்கப்ப்பட்ட முதல் ஜிம் புகைப்படம் என்று கூறியுள்ளார்.