நீங்கள் 04ஆம் எண்ணில் பிறந்தவரா? பொறாமை அதிகமாமே..!
பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அந்த வகையில் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் குணாதிசயம் என்னவென்று பார்ப்போம்.
எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய 4ஆம் எண்காரர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது.
இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். தனக்கு ஏற்படும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களை திருத்திக் கொள்வார்கள்.
யாரேனும் இரகசியம் கூறினால், அதை காப்பாற்றாமல் மற்றவர்களிடம் கூறி விடுவார்கள். எந்தவொரு விடயத்தையும் பலமுறை அலசி ஆராய்ந்த பின்னர் முடிவெடுக்கும் இவர்கள் தங்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்.
அதிக எதிர்பார்ப்புக்களை தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.
குடும்பம்
பெற்றோரின் கருத்துக்கு எப்பொழுதும் எதிராகவே செயற்படுவார்கள். தங்கள் சகோதரரிடம் பொறாமையும் விட்டுக்கொடுக்காத தன்மையும் இருக்கும்.
நண்பர்கள்
நண்பர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் இவர்கள், சூழ்நிலைக்கேற்ப நண்பர் வட்டத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
உடல் வாகு
நடுத்தர உயரம் கொண்டவர்களாகவும் வசீகர முகம் மற்றும் கருமையான தலைமுடி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வரிசையான பல் வரிசையை கொண்டிருப்பார்கள்.
தொழில்
மீன், இறைச்சி வியாபாரம், உணவக நிர்வாகம், சினிமாத் துறை, மரக் கைத்தொழில்கள், சட்டத்தரணி போன்ற தொழில்கள் சிறப்பாக கைகொடுக்கும்.
திருமணம்
இவர்களது திருமண வாழ்க்கை இன்பமாகச் செல்லும். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்புக்கள் மிகவும் அதிகம். வாழ்வில் அன்பும் காதலும் கலந்திருக்கும்.