தலைமுடி உதிர்விற்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு... இந்த ஒரு பொருளை மட்டும் பூசுங்க!
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு, தலைமுடி வெடிப்பு ஆகியன பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
இந்த தலைமுடி உதிர்வு பிரச்சினை தலையில் பூஞ்சைத் தொற்றுக்கள் மற்றும் பொகுத் தொல்லை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் தான் ஏற்படுகின்றன.
இது போன்ற பிரச்சினைகளை நமது வீடுகளில் சமையறையில் இருக்கும் சில மூலிகை பொருட்களை கொண்டு தடுக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் தலைமுடி பிரச்சினை இஞ்சியை பயன்படுத்தி மருத்துவம் செய்தால் நிச்சயமாக தடுக்கலாம்.
அந்த வகையில், தலைமுடி உதிர்வை தடுக்க இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
இஞ்சி தேய்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக நாம் இஞ்சி சாற்றை எடுத்து குடித்தால் இருமல், சளி பிரச்சினை குணமாகும் என மருத்துவர்கள் கூறுவார்கள்.
மாறாக இஞ்சி தலைமுடி சம்பந்தமான பிரச்சினையும் ஓட ஓட விரட்டுகிறது.
இதன்படி, உதிர்வு அதிகமாக இருக்கும் போது இஞ்சை எடுத்து அதனை சுத்தப்படுத்தி விட்டு அதனை குளிக்கச் செல்வதற்கு முன்னர் ஈரப்பதம் உலரும் வரை நன்கு முடியின் வேர்க்கால்களில் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். இது போல் செய்வதால் தலைமுடி உதிர்வு காலப்போக்கில் குறையும். மேலும் இஞ்சி பூசி 10 நிமிடங்களுக்கு பின்னர் தான் கழுவ வேண்டும்.
கழுவிய பின்னர் இஞ்சி மணம் கூந்தலில் லேசாக இருக்கும்.
முக்கிய குறிப்பு
ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் பயன்படுத்தலாம்.