நயன்தாராவிடமே Adjustment கேட்டாங்களா? கசப்பான அனுபவங்களை பகிர்ந்த லேடி சூப்பர்ஸ்டார்
சினிமாவில் இப்படியெல்லாம் இருந்தால் மட்டும் தான் படவாய்ப்பு என தன் திரையுலக கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார் நயன்தாரா.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார். மேலும், சிம்பு மற்றும் நயன்தாரா முதலில் காதல் உறவில் இருந்து வந்தனர், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்தார்.
பிறகு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமாவில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா. 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார்.
அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.
கசப்பான அனுபவம்
திரையுலகில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதன்படி அட்ஜஸ்மெண்ட் செய்தால் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறியதாகவும், அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என நிராகரித்துவிட்டதாகவும் நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
மேலும் தனது நடிப்பு திறமையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அந்த பேட்டியில் நயன்தாரா தெரிவித்து இருக்கிறார். திரையுலகில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றி பல்வேறு நடிகைகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாராவும் இதுபோன்ற மோசமான அனுபவங்களை எதிர்கொண்டு இருக்கிறார் என்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே உள்ளது.