நீத்தா அம்பானியின் நீண்ட நாள் கனவு: திரைப்பிரபலங்களுடன் கொண்டாட்டம்
உலக பணக்காரப்பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கனவாக இருந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
திறப்பு விழா
நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் திறப்பு விழா நேற்று மும்பை ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்றுள்ளது.
பல வருடங்களாக ஒரு கலாச்சார மையத்தை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த இவர், தற்போது இந்த பிரமாண்ட கலாச்சார மையத்தை துவங்கியுள்ளார்.
இந்த சிறப்பு நாளில், பல ஒழுங்குமுறை கலாச்சார வெளி பார்வையாளர்களுக்கு இசை, நாடகம், நுண்கலைகள் மற்றும் பிற விஷயங்களை வழங்கும். மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெறும்.
இந்த மெகா நிகழ்வில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜான்வி கபூர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், நாளை (2ம் திகதி) ஆடை விதிமுறைகள் வித்தியாசமாக இருக்கும். விருந்தினர்கள் மேற்கத்திய ஆடைகளை அணிய வேண்டும்.
நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் பிரமாண்ட திறப்பு விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.