இந்த விதிகளை 30 நாட்களுக்கு செய்தால் பிதுங்கிய தொப்பை உள்ளே போகும்- அப்படி என்ன அது?
தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினை அதிகமாக இருந்து வருகிறது.
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு தொப்பை தலையை தட்டும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருக்கும். அதனை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சிக்க வேண்டும்.
அதாவது, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் உள்ளிட்ட பழக்கங்களை தொடர்ந்து 30 நாட்களுக்கு கடைப்பிடிப்பின், உடம்பில் நல்லதொரு மாற்றத்தை பார்க்கலாம்.
எடையைக் குறைக்க சிலர் இடைவிடாத உண்ணாவிரதம் முதல் கடுமையான உடற்பயிற்சிகள் வரை செய்வார்கள். இதுவும் ஒரு வகையான முயற்சி தான்.
இவ்வளவு கஷ்டங்கள் அனுபவிப்பவர்களுக்கு மத்தியில் நம்மிள் பலர் எளிதாகவும் விரைவாகவும் எடை குறைக்க வழித் தேடுவார்கள்.
அந்த வகையில், தொப்பையைக் குறைப்பதற்கான விதிகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
நம்மிள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை கண்டிப்பாக இருக்கும். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். உதாரணமாக இனிப்பு பானங்கள், குளிர் பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக விரும்பி சாப்பிடும் பீட்சா, பர்கர்கள் மற்றும் சிப்ஸ் போன்ற வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான சிற்றுண்டிகளை உண்ண வேண்டும்.
2. உடல் செயல்பாடுகள் - கட்டாயமான உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடலை அசைக்காமல் வைத்திருக்காமல் முடிந்தவரை நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்யலாம். அதிக தீவிர இடைவெளி பயிற்சி (HIIT) பயிற்சிகள் கலோரிகளை வேகமாக எரித்து எடை இழப்பை துரிதப்படுத்தும். ஜிம்மிற்கு செல்ல விரும்பாதவர்கள் வீட்டிலேயே குந்துகைகள், புஷ்-அப்கள் மற்றும் கார்டியோ பயிற்சிகள் செய்யலாம்.
3. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போன்று 8 மணி நேரம் தூக்கமும் அவசியம்.
நீரேற்றம் மற்றும் தூக்கம் இவை இரண்டும் எடையில் தாக்கம் செலுத்துகிறது. ஒரு நாளில் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்க உதவும். அதே போன்று நாளில் 7-8 மணிநேரம் போதுமான தூக்கம் அவசியம். சரியாக தூங்காத ஒருவரின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |