நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு! சிசிடிவியில் வசமாக சிக்கிய தனுஷ்
தமிழ் சினிமாவில் மரகத நாணயம், மொட்டசிவா கெட்டசிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இந்நிலையில், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த தனுஷ்(19) என்ற இளைஞர் உயர்ந்த கேமரா மற்றும் நிக்கி கல்ராணியின் ஆடைகளைத் திருடிச் சென்றதாக சென்றதாக அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
விருத்தாசலத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிக்கி கல்ராணி வீட்டில் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்துள்ளார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டிலிருந்து கேமரா மற்றும் அவரது ஆடைகளை இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து நிக்கிகல்ராணி புகார் அளித்த நிலையில் தனுஷ் என்ற நபர் திருப்பூரில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
மேலும், நிக்கி கல்ராணியின் கேமரா மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் தனுஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி புகாரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.