அரங்கத்தில் மனைவிமார் போட்ட ஆட்டம்... கோபிநாத் முன்பு அப்பாவியாக நின்ற கணவர்கள்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தன்னுடன் நடனம் ஆட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும், கூச்சப்படும் கணவன் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தன்னுடன் நடனம் ஆட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும், கூச்சப்படும் கணவன் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் தன்னுடன் நடனமாட தயங்கும் கணவர்களை பெண்கள் விடாமல் டார்ச்சர் செய்து ஆட வைப்பதுடன், அவர்களை பேச முடியாத அளவிற்கு மூச்சிரைக்கவும் செய்துள்ளனர்.
இதனை அவதானித்த கோபிநாத் சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்ததுடன், அப்பாவியாக நின்ற கணவர்களை பார்க்க மிகவும் பாவமாகவே இருந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |