தூக்குடா அந்த செல்லத்த... நீயா நானா கோபியிடம் மாட்டிக்கொண்ட பெண்! சிரிப்பை அடக்க முடியாத காட்சி
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் கோபிநாத் மீம் கிரியேட்டராக மாறி பெண் ஒருவரின் செயலை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மாமனார் மற்றும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் வேலையில்லாத தனது மகனை திருமணம் செய்து கொள்ள முன்வந்த பெண்ணையும், அவர் மருமகளிடம் பேசிய வார்த்தைகளையும் மாமனார் அரங்கத்தில் கூறியுள்ளார்.
இதனை கேட்டு பிரமித்துப் போன கோபிநாத், வெளியே உனக்கு மீம் கிரியேட் செய்து விடுவார்கள் என்று கூறி, அது என்ன மீம் என்றும் அரங்கத்தில் கூறியுள்ளார்.
குறித்த பெண் கோபிநாத்தின் இந்த பேச்சால் வெட்கத்தில் தலைகுனிந்துள்ள நிலையில், அரங்கமே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.