நீயா நானா நிகழ்ச்சிக்காக 6 லட்சம் செலவு செய்த பெண்... வாயடைத்துப் போன கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள் மற்றும் குடும்பத்தலைவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள் மற்றும் குடும்பத்தலைவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் கலந்து கொண்ட பெண்ணில் ஒருவர் நீயா நானா நிகழ்ச்சிக்கு வருவதற்காகவே 6 லட்சம் செலவு செய்து எட்டரை பவுன் புதிய நகை வாங்கி அணிந்து வந்துள்ளார்.
மற்றொரு பெண் ஒட்டியானம் வாங்குவதற்காக 20 கிலோ எடையைக் குறைத்து இறுதியில் அதையும் வாங்கியுள்ளார்.
மற்றொரு பெண் தன்னிடம் இருந்த ஏழரை சவரண் நகையை கொடுத்துவிட்டு புதிய டிசைன் என்ற பெயரில் செம்பு கலந்த தங்கத்தை 5 பவுன் வாங்கி 1 லட்சத்திற்கு மேல் நஷ்டத்தை பெற்றுள்ளார்.
அரங்கத்தில் மற்றொருவர் புதிய நகை வாங்கிவிட்டு டிசைன் பிடிக்கவில்லை என்று 20 நாளில் கடைக்கு கொண்டு சென்று மாற்றி 45 ஆயிரம் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இந்த பெண்கள் கூறுவதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட கணவரின் பரிதாப ரியாக்ஷனும், கோபிநாத் வாயடைத்துப் போய் எதுவும் பேச முடியாமல் நின்றுள்ளார்.