நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து கோபிநாத் வெளியேறுகிறாரா? போட்டியாக வந்த பிரபல தொகுப்பாளினி
நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வருவதற்கு டிடி ஆசைப்பட்டது தற்போது பேட்டி ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.
தொகுப்பாளினி டிடி
பிரபல ரிவியின் செல்லப்பிள்ளை என்று வலம் வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி, பிரபல ரிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் பள்ளிப்பருவ நண்பரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
தற்போது டிடி தனியாகவே வாழ்ந்து வருகின்றார். டிடி ஆரம்பத்தில் பள்ளியில் நடிககும் போது விஜய் சிறப்பு விருந்தினராக வந்த போது அவரிடம் தொகுப்பாளினியாக மாறி கேள்வி கேட்டாராம். அதன்பின்பே இவர் டிடி வித் காபி என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் டிடி-க்கு வாய்ப்பு கொடுத்த யோசித்த பிரபல ரிவியில் பின் நாளில், பெரும்பாலான நிகழ்ச்சியினை டிடியை தான் தொகுப்பாளினியாக போட்டுள்ளனர்.
இந்நிலையில் டிடி-யும், கோபிநாத்தும் நிகழ்ச்சி ஒன்றில் மாறி மாறி பேட்டி எடுத்துக்கொண்ட போது பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளனர்.
நீயா நானாவிற்கு டிடி
பிரபல ரிவியில் எந்தவொரு நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்க வேண்டும் என்று நினைக்கின்றாய் என்று டிடி-யிடம் கோபிநாத் கேட்டுள்ளார்.
இதற்கு டிடி அனைத்து நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய நிலையில், நீயா நானா மட்டும் தொகுத்து வழங்க வேண்டும் என்றும் உங்களது இடத்தில் இருந்து தகுந்த மாதிரி என்னால் பேச முடியுமா என்று தெரியாது என்று பதிலளித்தார்.
இதற்கு கோபிநாத் இதைத் தான் எதிர்பார்த்ததாகவும், நானும் ஒரு ரகசியத்தை கூறுகின்றேன் என்றும் தன்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம், தனக்கு டிடி வித் காபி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக உள்ளதாகவும் என்று கூறியுள்ளார்.
இருவரும் இவ்வாறு வெளிப்படையாக பேசிய நிகழ்வுகள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |