கோபிநாத் கேட்ட ஒரு கேள்வியால் கண்கலங்கி அழுத நபர்! உயிர் வாழ ஆறுதல் “அது” தானாம்
“எதுக்கு வாழ்க்கை என நினைத்த போது எனக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் இளையராஜா” என ஒருவர் நீயா நானாவில் பேசியது கண்கலங்க வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சி மற்றைய நிகழ்ச்சியை விட டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விவாதம் போல் பேசி அதற்கு ஒரு தீர்வு காண்பது தான் இந்த நீயா நானாவின் முக்கியம்சம்.
மேலும் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்களும் அதிகம் இருக்கின்றார்கள்.
இளையராஜாவின் மகத்துவம் என்ன என்று தெரியுமா?
இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானாவில் இளையராஜா குறித்து விவாதங்கள் இடம்பெற்றது.
அதில் இளையராஜாவின் பாடல்கள் காலநிலைக்கு ஏற்ப கேட்கலாம் என ஒருவர் கூற, அதற்கு இன்னொருவர் இளையராஜாவின் ஈடாக இன்று யாரும் பாடல்கள் பாடவில்லையென கூறியுள்ளார்.
இதனிடிடையே “என்னுடைய கண்கள் சரியாக தெரியாது கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு ஒளி மட்டும் தெரிந்தது காலங்கள் செல்ல செல்ல அந்த ஒளியும் காணாமல் போனது. அப்போது இளையராஜாவின் ஒரு பாடல் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்தது..” என அவர் கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு அங்கிருந்தவர்கள் உட்பட ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.