இளையராஜா தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது - விஜய் ஆண்டனி ஓபன் டாக்!
இளையராஜா தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் இவர் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக இயக்குநராக மாறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லங்காவி தீவில் நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென விபத்தில் சிக்கினார்.
பிறகு இவர் மீட்கப்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனையடுத்து சென்னை திரும்பிய அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறினார்.
விஜய் ஆண்டனி ஓபன் டாக்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சேனலுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் முதலில் இசையமைப்பாளராகத்தான் இருந்தேன். நடிப்பு என்பது பாதியில் எடுத்த முடிவு தான். நான் யோசிக்கக்கூட இல்லை. என் படத்திற்கு இளையராஜா ஐயா இசையமைப்பார் என்று. மற்றவர்கள் மாதிரி நான் இல்லை.
நான் அவர் பாட்டு கேட்டுத்தான் இசையமைப்பாளராக மாறினேன். என்னிடம் யாராவது வந்து என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கு நான் அதெல்லாம் தெரியாது. இளையராஜா பாட்டு தெரியும் என்று சொல்வேன். அதுதான் எனக்கு மீட்டர். அவர் எப்படி ரெக்கார்ட் பண்றாரு. எப்படி எல்லாவற்றையும் கையாளுகிறார் என்பதுதான் எனக்கு படிப்பு. ஒரு பாட்டோட லவ் எப்படி போய் கொண்டிருக்கிறது என்பதை உன்னிப்பாக பார்ப்பேன் என்று மனம் திறந்து பேசினார்.