நீயா நானா நிகழ்ச்சியில் வான் கோழி பிரியாணி! கோபிநாத்தையே வரிசையில் நிற்க வைத்த சோகம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் கோபிநாத் வான்கோழி பிரியாணிக்கு மனிதர்கள் வரிசையில் நிற்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு பிரியாணி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் பிரியாணி விற்பனையாளர் ஒருவர் வான்கோழி பிரியாணியை நீயா நானா அரங்கத்திற்கே செய்து கொண்டு வந்துள்ளார். இதனை அங்கு கலந்து கொண்ட மக்களும் கடுமையாக போட்டிபோட்டு சாப்பிடுகின்றனர்.
சிலர் ஒரு படி மேலே சென்று வரிசையின் நின்று வாங்கி சாப்பிடுகின்றனர்.