நான் லெஸ்பியனா? நீயா நானாவில் தலைமுடியால் எழுந்த பிரச்சினை! பதில் கூற முடியாமல் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் நீளமான முடி வைத்திருக்கும் பெண்கள், அது தேவையில்லை என குட்டையான முடி வைத்திருக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு நீளமான முடி வைத்திருக்கும் பெண்கள், அது தேவையில்லை என குட்டையான முடி வைத்திருக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த கார சாரமான விவாதத்தில் பெண் ஒருவர் தான் குட்டையான முடி வைத்திருப்பதால், லெஸ்பியன் என்று கூறி பெண் ஒருவர் மனம் கஷ்டப்பட்டுள்ளார்.
பெண்களின் இந்த விவாதத்தினை பார்த்து, கோபிநாத் எதுவும் பேச முடியாமல் நிற்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.