சர்ச்சைகளுக்கு மத்தியிலும் விஜய்க்கு ஆதரவு கொடுத்த த்ரிஷா! செய்த சேட்டையை பாருங்க
பிரபல நடிகை த்ரிஷா, தேர்தலில் வாக்களித்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருப்பதோடு, அதில் விஜய்யின் பாடலையும் இணைத்திருப்பது மீண்டும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவின் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாகவே ஜொலித்து வருகின்றார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் அதிகமாக வலம் வருகின்றது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது.

மேலும் விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒரே காரில் சென்றிருந்தார்.
குறித்த விடயம் இணையத்தையே போர்களமாக மாற்றியது என்றால் மிகையாகாது.

அது மாத்திரமன்றி சமீபத்தில் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது.
ஆனால் இது எதையும் கண்டுக்கொள்ளாமல் த்ரிஷா உடற்பயிற்ச்சி, சுற்றுலா என வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.

இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மீண்டும் தேர்தலில் வாக்களித்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருப்பதோடு, அதில் விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற ‘அர்ஜூனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு’ பாடலை வைத்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பாடல் ‘விசில்’ உடன் தொடங்கும். “ஆகவே இது த்ரிஷா விசில் சின்னத்துக்கு வாக்களித்ததை குறிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |