Periods நாட்களில் தந்தையாக மாறிய மாமனார்! நீயா நானா அரங்கத்தில் கண்கலங்கிய பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் காதல் திருமணம் செய்து வந்த மருமகள்கள் மற்றும் மாமனார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு காதல் திருமணம் செய்து வந்த மருமகள்கள் மற்றும் மாமனார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னையே வீட்டிற்கு வந்த மருமகள் கண்கலங்கி அழ வைத்ததாக நபர் கூறிய நிலையில், இறுதியில் பிரசவத்தின் போது அந்த மருமகளின் உள்ளாடையை கூட துவைத்து போட்டுள்ளாராம்.
மற்றொரு பெண் கூறுகையில், மாதவிடாய் காலத்தில் ஒதுங்கி வாசலில் நிற்பேன்... அப்பொழுது எனது மாமனார் மாமியாரை சத்தம் போட்டு என்னை உள்ளே அழைத்து வருவார். அப்பொழுதிலிருந்து அவரை நான் அப்பாவாக பார்த்தேன் என்று கூறி கண்கலங்கியுள்ளார்.