நீயா நானா அரங்கில் வாக்குவாதம்! நபரை வெளியேற கோரிய கோபிநாத்?
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் ஏற்பட்ட விவாதம் கடைசியில் வாக்குவாதமாக மாறியதால், கோபிநாத் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சிறு தொழில் முதலாளிகள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாளி ஒருவர் மது அருந்திவிட்டு மூன்று நாட்கள் வேலைக்கு வரமாட்டார்கள் என்று தமிழக தொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதனால் கொந்தளித்த தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒரு கட்டத்தில் கோபிநாத் குறித்த நபரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற கூறுவது போன்று செய்கை காட்டியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
You May Like This Video