தலைமுடிக்காக நீயா நானா அரங்கில் விவாதம்! கொந்தளித்த கோபிநாத்
குட்டையான தலைமுடி வைத்திருக்கும் பெண்களுக்கு ஆண்களின் சீண்டல்கள் குறைவாக இருக்கும் என நீயா நானாவில் பெண்ணொருவர் பேசியுள்ளார்.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று நீயா நானா. இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
மாற வேண்டியது ஆண்களே தவிர
இந்த நிலையில் இந்த வாரம் குட்டையான தலைமுடி வைத்திருக்கும் பெண்களுக்கும் நீளமாக தலைமுடி வைத்திருக்கும் பெண்களுக்கு ஒரு விவாதம் ஒன்று இடம்பெறுகின்றது.
இந்த விவாதத்தில் குட்டைய தலைமுடி வைத்திருப்பதால் “என்னை நான் பாதுகாப்பாக உணருகிறேன். ஆண்களிடம் இருந்து வரும் பிரச்சினைகள் முதல் கட்டத்திலேயே முடிவடைகின்றது” என பேசியுள்ளார்.
அதற்கு, தலைமுடி நீளமுள்ள பெண்கள் அணி, “ இப்படி தான் பிரச்சினை குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.” என பேசியுள்ளார்.
தொடர்ந்து, ஒரு பெண்ணை பாதுகாத்து கொள்வதற்கு அவர்களின் தலைமுடியை வெட்ட வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் பலமாக வாதப்படுகின்றது.