காதல் திருமணத்திற்குள் இவ்வளவு பாசமா? நீயா நானாவில் மருமகளை பார்த்து கண்கலங்கிய மாமனார்!
“என்னை பார்த்து சாப்பிட்டிங்களானு? என முதல் முறையாக கேட்டது என் மருமகள் தான்” என மாமனார் ஒருவர் கண்கலங்கியுள்ளார்.
நீயா நானாவில் சிறப்பு விவாதம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
மாமனாரை கண்கலங்க வைத்த மருமகள்
இந்த நிலையில் இந்த வாரம் மாமனார் - மருமகள் வீட்டில் நடக்கும் சில நடைமுறைகள் பற்றி விவாதம் இடம்பெற்று வருகின்றது.
அதில் சில மாமனார்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இப்படியும் மருமகள்கள் இருக்கிறார்களா? என சிந்திக்க வைத்துள்ளது.
அதில்,“ என்னை பார்த்து என் மருமகள் வரும் வரை யாரும் சாப்பிட்டிங்களா? என கேட்டது இல்லை இவர் தான் முதல் கேட்டார். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். என் மருமகள் என்னை பார்த்து அப்படி கேட்கும் போது அழுது விட்டேன்.” எனக் கூறியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் குடும்ப பெண்களின் பெறுமையையும் இந்த வாதம் எடுத்து காட்டியுள்ளது.