ஒத்த பாயிண்ட்டை வைத்து மடக்கிய மாமனார் ரஜினி... முரண்டு பிடித்த தனுஷ்!
தனுஷும், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க துடிப்பது ரஜினி தான்.
மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள். பிள்ளைகளை விட உங்களுக்கு உங்களின் சந்தோஷம் முக்கியமா என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறாராம்.
முதலில் முரண்டு பிடித்த தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது ரஜினியின் வழிக்கு வந்துவிட்டார்களாம்.
யாத்ரா, லிங்காவுக்காக மீண்டும் சேர்ந்து வாழ்கிறோம் என்று கூறியிருக்கிறார்களாம்.
முன்னதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்தார்கள். அப்பொழுதும் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுமாறு கூறி சேர்த்து வைத்தாராம் ரஜினி.
இந்நிலையில் மீண்டும் மகன்களை காரணம் காட்டி தனுஷ், ஐஸ்வர்யா மனதை மாற்றிவிட்டாராம்.