மனைவி இல்லாமல் குழந்தையை வளர்க்க நாங்க படும் அவஸ்தை! அரங்கத்தை கண்கலங்க வைத்த அப்பா
அம்மா இல்லாமல் தனியாக குழந்தைகளை வளர்க்கும் அப்பாக்களின் மன வேதனைகள் குறித்து நீயா நானாவில் விவாதிக்கப்படுகிறது.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
மனைவி இல்லாமல் கணவரின் நிலைப்பாடு
இந்த நிலையில் மனைவி இல்லாமல் தனியாக பிள்ளைகளை வளர்க்கும் தந்தையின் கண்ணீருடன் கூடிய அனுப்பவக்கதை இன்றைய வாரம் நீயா நானாவில் விவாதிக்கப்படுகிறது.
அதில், நான் என்னுடைய குடும்பத்திலுள்ளவர்களின் கஷ்டங்களை மனநிலையை புரிந்து கொண்டு அதனை செய்து முடிக்கும் முன் என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது.
மேலும் என்னுடைய அப்பா - அம்மா இருவரையும் பார்த்து கொண்டு குழந்தைகளை பார்க்கும் போது அது தான் எனது வாழ்க்கையில் பெரிய டாஸ்க்.” என ஒரு அப்பா கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து அங்கு அமர்ந்துள்ள மகன், “ என் அப்பா 5 பேர் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்வார்.” என கூறி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.