டீ-க்காக நீயா நானா அரங்கில் நடந்த பேரம்! கொந்தளித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் டீக்காக பேரம் பேசிய காட்சி வைரலாகி வருகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அளவுக்கு அதிகமாக டீ எடுத்துக்கொண்ட நபரும், அதனை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் அரங்கத்தில் நபர் ஒருவர் 25 டீ குடிப்பதாக கூறிய நிலையில், அதற்கு நீயா நானா கோபிநாத் பேரம் பேசி 2 டீக்கு கேட்ட நிலையில், குறித்த நபர் ஒரு வழியாக இறுதியாக 4 டீயில் வந்துள்ளார்.