கண்ணீருடன் இறுதி சடங்கு நடத்திய குடும்பத்தினர்! உயிருடன் தெருவில் நடமாடிய தந்தை... நடந்தது என்ன?
இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கும் போது உயிருடன் மீண்டு வந்த முதியவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குடும்ப பிரச்சினை
இந்தியாவிலுள்ள உளுந்தூர்பேட்டையின் நெடுமானுர் என்ற கிராமத்தை சேர்ந்த தான் சுப்பிரமணி. இவருக்கு தற்போது 65 வயது ஆகிறது. இந்த நிலையில் இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.
சுப்பிரமணி கடந்த காலங்களில் தங்களின் பிள்ளைகளுடன் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் பின்னர் இவர் குறித்து எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுபகுதியில் பிணமொன்று அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி விவசாயியொருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அழுகிய நிலையில் கிடைத்த பிணம்
இந்த பிணத்தை பார்த்த குறித்து இளைஞர்கள் இருவரும் தன்னுடைய தந்தை தான் இவ்வாறு மரணமடைந்துள்ளார் என எண்ணி அந்த பிணத்தை வாங்கி கொண்டு வந்துள்ளார்கள்.
அப்போது அந்த பக்கமாக சென்ற உறவினர்கள் சுப்பிரமணியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள். “நீ இறந்து விட்டதாக உன்னுடைய வீட்டில் இறுதி சடங்கு நடக்கிறது.
ஆனால் நீ இங்கு இருக்கிறாய்” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்கள். இதனை கேட்ட சுப்பிரமணி பதறிய நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் வீட்டார் உட்பட உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
கழுவி ஊற்றும் இணையவாசிகள்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பிணத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தன்னுடைய தந்தை தெரியாமல் வாழும் பிள்ளைகள்” என அதிருப்தியான கமண்ட்களை செய்து வருகிறார்கள்.