நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா? பலருக்கும் தெரியாத பதில் இதோ
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவு பொருள் தான் நெல்லிக்காய்.
நெல்லிக்காயை தினமும் ஜுஸாக குடிப்பது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகின்றது.
உடல் பருமன் குறையும்
நெல்லிக்காயை ஜுஸ் செய்து குடித்தால் உடலில் உள்ள புரோட்டின் அளவை அதிகரித்து கொழுப்புக்களை குறைக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நெல்லிக்காய் ஜுஸ் அருந்தலாம்.
கண்களுக்கு பாதுகாப்பு
கண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளான கண்புரை, கண் எரிச்சல், கண்களில் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வாரத்திற்கு ஒருமுறை நெல்லிக்காய் ஜுஸ் அருந்தலாம்.
உடல் சூடு தணியும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுவதுடன், கோடைக்காலங்களில் குடித்து வந்தால் உடல் சூட்டை தணிக்கும்.
இரப்பை கோளாறுகள் தீரும்
வாரம் ஒருமுறை இந்த ஜுஸை குடித்து வந்தால் இரைப்பைக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் குணமாவதுடன், கல்லீரலை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.
இதயம் வலிமை பெறும்
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றுகின்றது. ரத்தத்தை சுத்தமாக வைப்பதுடன், இதயத் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்குவதோடு, இதய தசைகளையும் வலிமையாக்குகின்றது.
எலும்புகளின் ஆரோக்கியம்
உடலில் உள்ள எலும்புகளை வலிமையுடன் வைத்துக்கொள்ளும் நெல்லிக்காய், எளிதில் உடையாமலும் திடமாக வைக்கவும் உதவுகின்றது.
தினமும் சாப்பிடலாமா?
இவ்வாறு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசிக்க பலரும் கூறுவார்கள்.
இதற்கு காரணம் ஜுஸாக சாப்பிடும் போது நெல்லிக்காயின் அளவு அதிகரிக்கின்றது. மேலும் நம் உடம்புக்கு வைட்டமின் சி குறைவாகவே தேவைப்படுகின்றது.
ஆனால் நெல்லிக்காய் ஜுஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படுமாம்.