மாதவிடாய் காலங்களில் பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள்! பெண்களே உஷார்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும்.
இருப்பினும், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது.
மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும்.
உப்பு மற்றும் காரமான உணவு
பொரித்த உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது நீரை தக்கவைத்துக் கொள்வதற்கு காரணமாவதால், இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
காஃபி மற்றும் மது
தலைவலி மற்றும் மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும் காஃபி, எனர்ஜி பானங்கள் மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும்.
அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்
ஸ்வீட், கேக், ஐஸ்கீரிம் பானங்கள், இனிப்புகளை தவிர்க்க வேண்டும். முற்றிலும் தவிர்க்க முடியவில்லை என்றால் குறைந்த அளவில் எடுத்தக் கொள்ளவும்.
ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்குப் போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம். இந்த நேரங்களில் உடல் கழிவுகளின் இயக்கம் கீழ்நோக்கிய திசையில் இருப்பதால், அதிகப்படியான வேலை, பேசுவது, சிந்தனை, தாம்பத்தியம் அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கலாம். ஆகவே இவற்றினை தவிர்த்து ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம்.