ஒரு நைட்டு தங்க இத்தனை லட்சமா? நயன்தாரா வாடகைக்கு எடுத்த நட்சத்திர ஓட்டலின் விலையை கேட்டு ஷாக்காகிடாதீங்க!
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
ஆகம விதிப்படி 20 புரோகிதர்கள் சூழ, திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
7 ஆண்டுக்காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. இது நயன்தாராவிற்கு மட்டுமில்லாமல் விக்னேஷ் சிவனுக்கும் சிறப்பான தருணம்தான்.

இந்த நிலையில் மகாபலிபுரத்தில் அவர்கள் வாடகைக்கு வாங்கிய நட்சத்திர ஓட்டலின் ஒரு நாள் வாடகை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா...?
திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் 3 நாட்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இரவுக்கு 1. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணத்தில் பலாப்பழ பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா கறி, மிளகு ரசம், என 27 வகை உணவு திருமண விருந்தாக பரிமாறப்பட்டுள்ளது.
மணமக்களுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு இரவுக்கு 1. 30 லட்சம் அதிகம் தான். மூன்று நாளுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டதால் 4.30 லட்சம் செலவு செய்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



